Tuesday, June 23, 2015

விவசாயம் செய்யுமா அடுத்த தலைமுறை?

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பதிவு !!

சுபதினத்தில் ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும்15 லட்சம் ரூபாய் போடப்படும் என செய்தி முதல் நாளே வெளியாகி விட்டது. மறுநாள் காலையில் 'உங்கள் கணக்கில் 15 லட்ச ரூபாய்' என்பதை பத்திரிகைகள் எல்லாம் தலைப்புச் செய்தியாக்கி இருந்தன. டி.வி-க்கள் எல்லாம் அதையே திரும்பதிரும்ப செய்தியாக சொல்லிக்கொண்டிருந்தன. சாமிப்பிள்ளை நம்ம கணக்கிலும் பணம் விழுந்திருக்கும் என்று புறப்பட்டுப்போனார். விடிந்ததும் விடியாததுமாக மக்கள் வங்கி ஏ.டி.எம் களை நோக்கி சென்றுகொண்டிருந்தனர். ஏ.டி.எம்மில் ஒருமைல் நீளத்துக்கு மிகப்பெரிய க்யூ நின்று கொண்டிருந்தது. சரி வேறு ஏ.டி.எம்முக்கு போகலாமென்றால் அங்கு இதை விட மிகப்பெரிய க்யூ நின்று கொண்டிருந்தது. சரி ஒரு டீயாவது முதலில் குடிப்போம் என்று போனால் டீக்கடை ஒன்று கூட திறந்திருக்கவில்லை. ஒரு ஓட்டலும் திறந்திருக்கவில்லை. சரி இவ்வளவு தூரம் நடந்து வந்து விட்டோம். வீட்டுக்காவது போகலாமென புறப்பட்டால் , அரசு போக்குவரத்துக்கழக பஸ் எதுவுமே வரவில்லை. கண்டக்டர், டிரைவர் என எல்லோரும் 15 லட்சம் ரூபாய் கிடைத்த குஷியில் லீவு போட்டு விட்டு எவரும் வேலைக்கு வரவில்லை. சரி இவ்வளவு தூரம் வந்து விட்டோமே எலக்ட்ரிக் டிரெயினில் போய் சேரலமென்றுப் போனால் மத்திய,மாநில அரசு பந்த்போல , எந்த ரயிலும் வரவில்லை. ரயில் நிலைய அலுவலர்கள் யாருமே பணிக்கு வரவில்லை. எல்லாம் 15 லட்சம் செய்யும் லீலை! சரி, இனி வேலைக்கு ஆகாதென வீட்டுக்கு வந்தார். நல்ல வேளையாக வங்கிகள் வேலை செய்தன. வங்கிகள் வேலை செய்தால்தானே வங்கி ஊழியருக்கே பணம் அதனால் வங்கிகள் மிகச்சிறப்பாக வேலை செய்தன. அறிவிப்பு வந்த 3 நாள் கழித்து சாமிப்பிள்ளை தன் கணக்கில் இருந்து அன்றைக்கு எடுக்க அனுமதிக்கப்பட்ட தொகையான 25 ஆயிரத்தை எடுத்துக்கொண்டார். ஆனால், சென்னையிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் முந்திக்கொண்டவர்கள் வாங்கிக்கொண்டு சென்று பதுக்கி விட்டனர். மக்கள் கூட்டம் ஒன்று, சென்னையை காலி செய்து தங்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அவர்களெல்லாம் தாம்பரம் வரையிலுமே நடந்துதான் வந்திருந்தனர். அந்தக்கூட்டத்தோடு சாமிப் பிள்ளையும் சேர்ந்து கொண்டார். எல்லோரும் வண்டலூர், மறைமலை நகர், சிங்கப்பெருமாள்கோயில், செங்கல்பட்டு என கடந்து வந்தனர். ரொம்ப தூரம் நடந்து வந்ததில் பசி வயிற்றைக் கிள்ளியது. ஒவ்வொரு வரும் மயக்க நிலைக்கே போய் கொண்டிருந்தனர். சாமிப்பிள்ளை ஒரு ஒத்தையடிப்பாதையைப் பிடித்து நடந்து போனார். அங்கே ஒரு விவசாயி குடும்பத்தினருடன் மணக்கும் கத்திரிக்காய் குழம்போடு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சாமிப்பிள்ளைக்கு நாவில் எச்சில் ஊறியது. விவசாயி சாப்பிடச் சொன்னார். சாமிப்பிள்ளை சாப்பிட்டு முடித்தார். சரி, ' எனக்கு ஒரு 10 மூட்டை நெல் தேவை... வண்டி பிடித்து ஏற்றி விடுங்கள்' என்றார். உங்களிடம் பணம் எவ்வளவு இருக்கிறது? என்றார். 25 ஆயிரம் இருக்கிறது என்றார். அப்போது விவசாயி சொன்னார் உங்கள் காசுக்கு 20 கிலோ அரிசி கூட வாங்க முடியாது ஒருகிலோ அரிசி 1,500 ரூபாய் என்று விவசாயி கம்பீரமாகச் சொன்னார். சாமிப்பிள்ளை மயங்கி விழுந்தார். உண்மையிலேயே அவர் கட்டிலில் இருந்து தூக்கக் கலக்கத்தில் கீழே விழுந்தார். பிறகுதான் புரிந்தது, தான் இவ்வளவு நேரமாக கண்டது கனவு என்று. உடனே இனி எஞ்சியிருக்கும் வாழ்நாளில் விவசாயம் செய்தே வாழ்வோமென சூளுரைத்து சொந்த ஊர் புறப்பட்டார். கூடவே உழவுக்கு வந்தனை செய்வோம் வீணே உண்டு கழிப்போரை நிந்தனை செய்வோமென தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டே. ''இந்தியா சுதந்திரம் அடைந்துள்ள இந்த 68 ஆண்டுகளில், நம் நாட்டின் வளம் செல்வம் ஆகியவையெல்லாம் எல்லோரையும் சென்றடையாமல் ஒரு சாரரையே சென்றடைந்து விட்டது. பணக்காரர் மேலும் பணக்காரராகிக் கொண்டே போகிறார். ஏழை மேலும் ஏழையாகிக் கொண்டே போகிறார்.

இன்றைய தலைமுறை மனநிலை

shaadi.com இணையத்தளம் திருமணம் பற்றிய கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. 24-34 வயதுடைய 8,500 பேர் பங்குகொண்ட கருத்துகணிப்பு விவரம் வருமாறு:

பெண்களிடம் "திருமணதிற்கு பிறகு எங்கு(தனிக்குடித்தனம், மாப்பிளை வீட்டாருடன், பெற்றோருடன்) வாழ விரும்புகின்றீர்கள்" என்ற கேள்விக்கு:

தனிக்குடித்தனம்: 64.1%
மாப்பிளை வீட்டாருடன்: 29.6%
பெற்றோருடன்: 6.3%

ஆண்களிடம் ""திருமணதிற்கு பிறகு எங்கு(தனிக்குடித்தனம், மாப்பிளை வீட்டாருடன், பெற்றோருடன்) வாழ விரும்புகின்றீர்கள்" என்ற கேள்விக்கு:

பெற்றோருடன்: 54.3%
தனிக்குடித்தனம்: 43.9%
பெண் வீட்டாருடன்: 1.8%

பெண்களிடம் "உங்கள் கணவர் உங்கள் பெற்றோகளுடன் பழகுகிறார்களா?"

இருக்கலாம்: 42.6%
ஆமாம்: 27.3%
இல்லை: 30.1%

ஆண்களிடம் "உங்கள் மனைவி உங்கள் பெற்றோகளுடன் பழகுகிறார்களா?"

இல்லை: 73.5%
இருக்கலாம்: 21.8%
ஆமாம்: 4.7%

ஹம்ம்!!! பண்பாடு "பஞ்சர்" ஆகிக் கொண்டு இருப்பது கண்முன்னே தெரிகின்றது.